மூன்று நாள் தொடர் சரிவுக்கு பின்னர், இந்திய பங்குசந்தைகள் இன்று ஓரளவு ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கின. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ஐடி பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், பங்கு சந்தையில் ஏற்றம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்ந்து 83 ஆயிரத்து 484 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி 25 ஆயிரத்து 577 புள்ளிகளில் வர்த்தகமானது.ஏசியன் பெயின்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எல் அன்ட் டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது. எஸ்பிஐ, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, அதானி துறைமுக பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.