டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 2 கேட்சுகள் பிடித்ததன் மூலம், 197 கேட்சுகளுடன் ரிக்கி பாண்டிங்கை அவர் முந்தியுள்ளார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 196 கேட்சுகளுடன் முதலிடம் பிடித்திருந்தார்.