கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள உணவகத்தில் இயங்கி வந்த நீராவி இயந்திரம் திடீரென வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,4 பேர் படுகாயம் அடைந்தனர். கல்லூர் விளையாட்டு மைதானம் அருகே i'DELI CAFE என்ற உணவத்தில் உள்ள சமையல் அறையில் இயங்கி வந்த நீராவி இயந்திரம் திடீரென வெடித்து சிதறியதில், அங்கு வேலை செய்து வந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார்.