கட்டுமான பொருட்களின் தொடர் விலையேற்றத்தை கண்டித்து வருகிற ஜனவரி 7 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.மணல் குவாரிகளை போல கல்குவாரிகளையும் அரசே நடத்த வேண்டும், விலை நிர்ணயிப்பதை அரசே முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்