சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை இருந்து வந்தது. அந்த விதிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.