தமிழகம் முழுவதும் இன்று தொடங்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, 8 லட்சம் மாணவ-மாணவர்கள் எழுத உள்ளனர். இன்று தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ள பொதுத்தேர்வு, தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 316 மையங்களில் நடைபெறுகிறது. 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் 8 லட்சத்து 3 ஆயிரம் மாணவ, மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 கைதிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.