தமிழ்நாடு, புதுச்சேரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கின.இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.3,316 மையங்களில் 7,518 பள்ளிகளில் 8,21,057 தேர்வர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.8,03,000 மாணவ-மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145சிறைக்கைதிகள் என 8,21,057 எழுதுகின்றனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வை கண்காணிக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.