திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தை பின்பற்றும் ஊழியர்கள் மீது தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான பணியில் சேரும் போது தாங்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாகவும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். அதில் சிலர் தேவஸ்தான பணியில் இருந்துகொண்டு மாற்று மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.