மார்ச் மாதம் ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, போட்டி நடைபெற இருக்கும் மைதானங்களில் எந்தவிதமான மற்ற நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. நிகழ்ச்சி நடந்தால் மைதானத்தின் தரத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற காரணத்தினால் பிசிசிஐ இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது