கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர், கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.