ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள ராபின் ஹுட் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாக உள்ளநிலையில், பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நிதின் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்குகிறார். இப்படம் அடுத்த மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.