தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் ஆண்டு திருவிழாயொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி தீ மிதித்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து நடைபெற்ற பூஜையில், திரளான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க வழிபாடு நடத்தினர்.