இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமர திசநாயக, நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் இந்தியாவுக்கு இலங்கை மிகவும் முக்கிய நாடாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். மேலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் உறுதியளித்தார்.