இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றி இருக்காங்க.இது கடந்த 15 ஆண்டுகள்ல நியூசிலாந்துக்கு எதிரா கைபற்றப்பட்ட முதல் டெஸ்ட் தொடரா இலங்கை அணிக்கு இந்த தொடர் அமைஞ்சிருக்கு. இதன் மூலமா இந்த தொடர்ல நியூசிலாந்து அணி தோல்வியடைந்ததால உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்ல 3 இடங்கள் சரிந்து 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்காங்க.