இலங்கையில் 8 ஆயிரத்து 690 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட இருந்த இரு காற்றலை மின்திட்டங்களை திரும்பப் பெறுவதாக அதானி கிரீன் எனர்ஜிஸ் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை தலைநகர் கொழும்பில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் திட்டத்தை அதானி குழுமம் தொடர இருக்கிறது.