திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் அமாவாசை தினத்தையொட்டி மகா பிரத்தியங்கரா யாகம் நடைபெற்றது. 108 மூலிகைகள், பூக்கள் மற்றும் பழங்களை கொண்டு யாகம் வளர்க்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.