கல்வி நிலையங்களில் ஆன்மீகம் குறித்து பேச ஒரு காலமும் அனுமதிக்க முடியாது, இது மதசார்பற்ற நாடு என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு முட்டாள் தனமானது, பகுத்தறிவு உள்ள எந்த மனிதரும் இதனை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றார்.தமிழ்நாட்டின் கல்வி தரம் குறித்து ஆளுநர் பேசியதற்கும், இந்த நிகழ்ச்சிக்கும் பின்னணி உள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.