இறந்த மகனின் விந்தணுவை சொத்தாகக் கருதி பெற்றோர் வைத்துக்கொள்ள உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பளித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ப்ரீத் இந்தர் சிங் என்ற இளைஞர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தனது விந்தணு மாதிரியை உறையவைத்து சேமித்துள்ளார். மகனின் விந்தணு மாதிரியை தங்களிடம் ஒப்படைக்க கோரி அவரின் பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.