பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களின் அடிப்படையில் சுமார் 35 லட்சம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு, இடமாற்றம் மற்றும் ஒன்றும் மேற்பட்ட முறை பெயர்கள் பதிவானது உள்ளிட்ட காரணங்களுக்காக நீக்கப்படுகின்றன.