நவராத்திரி விழாவை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள கன்யகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் ரொக்க பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. குறிப்பாக அம்மனுக்கு தங்க புடவையும், ரொக்க பணத்தால் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. திரளான பக்தர்கள் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.