நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், டிஜிபியுமான ராமசந்திர ராவிடம் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தியது. துபாயில் இருந்து தங்கத்தை உடலில் மறைத்து வைத்து கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கில் டிஜிபி ராமசந்திர ராவுக்கும் தொடர்பு உள்ளதா? என்பதை விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் கௌரவ் குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட குழு விசாரணை நடத்தியது.