வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 9, 10, 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், திருத்தங்களை மேற்கொள்வதற்கான படிவங்களை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.