ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 9-ம் தேதி முதல் 11-ம் தேதிவரை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல, 13-ம் தேதி சொந்த ஊரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு திரும்பும் வகையில் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.