மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து பேசினர். அப்போது இந்தாண்டு மற்றும் அடுத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடைபெறக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.