சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, இன்று மாலை பூமியை வந்தடைகிறார். ஆக்சியம் 4 திட்டத்தின் கீழ் ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு சென்ற சுபான்ஷு உள்ளிட்ட நால்வர், 22 மணி நேரம் பயணம் மேற்கொண்டு இன்று மாலை 3 மணியளவில் கலிஃபோர்னியா கடற்பகுதிக்கு வந்தடைவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.