சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்தது.