மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக ஸ்டாஃபானி டெய்லர் 44 ரன்கள் எடுத்திருந்தார். 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் லாரா வோல்வார்ட் 59 ரன்களும், டாஸ்மின் பிரிட்ஸ் 57 ரன்களும் எடுத்ததால் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.