தவெக தலைவர் விஜய்-ன் மகன் சஞ்சய் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் மகன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுத்து உள்ளார். சந்தீப் கிஷனை வைத்து அவர் இயக்கி வரும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. நிச்சயம் பெரிய வெற்றியை பெறுவார் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில், அவர் தொடர்பான வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. விமான நிலையத்துக்கு வந்த சஞ்சய்-ஐ, ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்தார். உடனே, அவர், “ஏன் இப்படி?” என சைகையில் கேட்டார். அது அப்படியே விஜய் மாதிரி இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள், ”அப்படியே விஜய் மாதிரியே இருக்கிறார். பேசாமல் ஹீரோவாகி இருக்கலாமே?” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது. இதையும் பாருங்கள்... அப்பாவைப் போலவே மகன்...