அயர்லாந்தின் கவுண்டி கார்லோவில் ((county Carlow)) கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மலைமீது பனிப்போர்வை போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இது தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. லீன்ஸ்டர் மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடர்த்தியாக பனி படர்ந்திருப்பது, உள்ளூர் மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.