சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஆயிரத்து 602 ரன்களுடன் முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 314 ரன்கள் குவித்தது. இதில் ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.