பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் மோகன் ஜிக்கு 11 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவுக்கான மாத்திரைகள் கலப்பட்டதாகவும் இது இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் கலப்பட நெய் விவகாரத்தை மதத்தோடு தொடர்புப்படுத்தி மத கலவரத்தையே தூண்டும் அளவுக்கு மோகன் ஜி பேசியிருப்பது அவரது சாதி, மத வெறுப்புணர்வை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.