வரும் மே மாதம் முதல் Skype காணொலி தகவல் பரிமாற்ற செயலியை கைவிட அதன் உரிமையாளரான மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.14 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த செயலியை மைக்ரோசாப்ட் வாங்கியதில் இருந்து, அது பிரபலமான காணொலி தளமாக மாறியது. மிகவும் பழமையான அதே நேரம் பலரால் விரும்பப்பட்டு வரும் Skype க்கு பதிலாக, தனது சொந்த கண்டுபிடிப்பான மைக்ரோசாப்ட் Teams செயலியை பிரபலப்படுத்த மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. இதை அறிக்கை ஒன்றில் மைக்ரோசாப்டின்செயலிப் பிரிவுக்கான தலைவர் Jeff Teper தெரிவித்துள்ளார்.ஏற்கனவே பல ஆண்டுகளாக Skype ஐ போன்ற அம்சங்களுடன் மைக்ரோசாப்ட் Teams ம் இருந்து வருவதால், பயனர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Skype மூடப்படுவதால், மைக்ரோசாப்ட் ஊழியர்கள் யாருக்கும் வேலை போகாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.