மிரட்டும் லுக்கில் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்னக்கி தமிழ் சினிமாவில எல்லாராலும் கொண்டாடப்படும் நடிகரா மாறியிருக்கவரு சிவகார்த்திகேயன். தற்போது இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்துல SK23 படத்துலயும், சுதா கொங்கரா இயக்கத்துல பராசக்தி படத்துலயும் நடிச்சி வந்துட்ருக்காரு.இந்த நிலையில நடிகர் சிவகார்த்திகேயன் தன்னோட 40 வது பிறந்தநாள கொண்டாடி வந்துட்ருக்காரு. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில இயக்குநர் சுதா கொங்கரா பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, அதில இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹீரோ! சிவகார்த்திகேயன் என வாழ்த்து சொன்னதோடு, உங்களுடன் இணைந்து பணிபுரிவதில முழுமையான மகிழ்ச்சி என தெரிவிச்சிருக்காங்க.அதுமட்டுமில்லாம சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி SK23 படத்தோட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்ருக்கு. அதன்படி, இந்த படத்துக்கு மதராஸி என தலைப்பு வைக்கப்பட்ருக்கு. இது குறித்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோல நடிகர் சிவகார்த்திகேயன் வெறித்தனமான லுக்குல மிரட்டி இருக்கிறாரு.படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில வைரலாகி வந்துட்ருக்கு. இந்த நிலையில மதராஸி படக்குழுவினர் சிவகார்த்தியை நேரில் சந்திச்சி பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியிருக்காங்க.சூர்யாவின் அடுத்த பட கதாநாயகி இவரா நடிகர் சூர்யா நடிப்பில கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில எதிர்பார்த்த வரவேற்ப பெறாம தோல்வி அடைந்துச்சி. இந்த படத்த தொடர்ந்து மிக கவனமா கதைகளை தேர்ந்தெடுத்து வரும் நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல ரெட்ரோ படத்துல நடிச்சி முடிச்சிருக்காரு.இந்த படம் மே 1ம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவிச்சிருந்த நிலையில தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயகத்துல தன்னோட 45 வது படம், வெற்றிமாறன் இயக்கத்தில 'வாடிவாசல்' படம் என அடுத்தடுத்து சூர்யா நடிக்கிறது பிசியா இருந்துட்ருக்காரு. இந்த நிலையில சூர்யா நடிக்க போகும் அடுத்த படம் குறித்து அதிரடி அப்டேட் வெளியாகி இருக்கு. அதவாது இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில சூர்யா, தன்னோட 46 வது படத்துல நடிக்க இருப்பதாகவும், அதுமட்டுமில்லாம சூர்யாவுக்கு ஜோடியா இந்த படத்துல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க இருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. படம் இந்தியாவின் முதல் என்ஜின் எப்படி உருவானது என்பத பத்தின கதை என்பதால '760 சிசி' என படத்தலைப்பு இருக்கும் என சொல்லப்படுது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுது. தனுஷை இயக்கும் எச்.வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, நேர்கொண்ட பார்வை துணிவு படங்களுக்கு பிறகு இயக்குநர் ஹெச்.விநோத் அடுத்ததா கமல்ஹாசனை இயக்க இருப்பதா தகவல் வெளியாகியிருந்துச்சி. ‘KH233’ என அழைக்கப்பட்ட இந்தப் படத்த கமலோட ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதா அறிவிக்கப்பட்டுச்சி. ஆனா, அதுக்கு பிறகு படம் எந்த அறிவிப்பும் வெளியாகம இருந்தது. இதுக்கு இடையே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தோட இரண்டாம் பாகத்தில ஹெச்.வினோத் கவனம் செலுத்தி வருவதா சொல்லப்பட்ட நிலையில, தற்போது புது அப்டேட்டா தனுஷை வச்சி ஹெச்.வினோத் படம் ஒன்றை இயக்க இருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியிருப்பதாகவும், விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் முடிஞ்ச பிறகு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில படபிடிப்பை தொடங்க திட்டமிட்ருப்பதா தகவல் வெளியாகியிருக்கு.கூரன் படத்தின் டிரெய்லர் வெளியிடுநாய்களை மையமா வச்சி தமிழ் சினிமாவில அவ்வப்போது திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கு. அந்த வரிசையில அடுத்ததா நாயை மையமா வைச்சி எடுக்கப்பட்ட திரைப்படம் கூரன்.இந்த படத்தில எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன், சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிச்சிருக்காங்க.ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களம் அமைக்கப்பட்ருக்கு. இந்த படத்துல பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் முன்னணி கதாப்பாத்திரத்தில நடிச்சிருக்கு. இந்த படத்த அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியிருக்காரு. கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி கூரன்' திரைப்படத்தோட இசை வெளியீட்டு விழா சென்னையில நடைபெற்றிச்சி. படம் பிப்ரவரி 28 ந்தேதி வெளியாக இருக்கும் நிலையில படத்தோட டிரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது... சர்ப்ரைஸாக களமிறங்கிய மஞ்சுமா மோகன்இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அச்சம் என்பது மடமையடா படம் மூலமா தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மஞ்சுமா மோகன். அந்த படத்துக்கு பிறகு சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் என பல படங்கள்ல நடிச்சி தள்ளினாலும் எந்த படமும் கைகொடுக்கலனுதா சொல்லனும்.இந்த தேவராட்டம் படத்தில கார்த்திக்கின் வாரிசு கௌதம் கார்த்திக் உடன் ஜோடி போட்ருந்தாங்க. இந்த படத்தில ரெண்டுபேருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில அதற்கு பிறகு கார்த்திக் வீட்டு மருமகளாக மாறிட்டாங்க மஞ்சுமா மோகன். கல்யாணத்துக்கு பிறகு படத்தில நடிக்காம ஒதுங்கி இருந்த இவங்க யாருக்கும் தெரியாம படத்துல நடிச்சிட்டு வந்துட்ருப்பதா சொல்லப்படுது. அதன்படி மஞ்சுமா மோகன் நடிப்பில அடுத்தடுத்து இரண்டு வெப் தொடர்கள் வெளிவர இருப்பதா சொல்லப்படுது. அதில பிப்ரவரி 28ஆம் தேதி வெளிவர இருக்கும் வெப் தொடரான சுழல் இரண்டாம் பாகத்தில மஞ்சிமா மோகன் கதாபாத்திரத்தை மிகவும் சர்ப்ரைஸ்ஸா வைச்சிருக்காங்களா படக்குழு. இவர வச்சிதா அந்த தொடர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர இருப்பதா சொல்லப்படுது. எனவே சுழல் 2 வெப் தொடர்ல மஞ்சிமா மோகன் கதாபாத்திரம் என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பதை பொறுத்திருந்து பாப்போம். நெகிழ்ச்சியில் வெற்றிமாறன்வருஷம், வருஷம் தமிழ் திரையுலகை சேர்ந்த சிறந்த படம்,சிறந்த இயக்குநர்கள்,கலைஞர்கள, தொழில்நுட்ப கலைஞர்கள்ல கௌரவிக்கும் விதமா, CHENNAI INSTITUTE OF EDUCATIONAL TECHNOLOGY & RESEARCH சார்பா CINEMA AT ITS BEST (CAIB ) விருதுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில 2024 ம் ஆண்டுக்கான CAIB விருதுகள் விழா சென்னையில கோலாகலமா நடந்தது. இந்த விழாவில கலந்துகிட்ட இயக்குநர் வெற்றிமாறன், சித்தார்த் விஷ்வநாத், CH சாய், கானா காதர் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் விருதுகள வாங்கியிருக்காங்க. அப்போது நிகழ்ச்சியில பேசிய வெற்றிமாறன் விடுதலை படம் எனக்கு ரொம்ப முக்கியமான ஒரு படம் .என்னை இன்னும் மென்மேலும் மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்க வைக்கும் படம். இந்த விருது தனக்கு ஊக்கத்தை அளிப்பதோடு, இந்தப் படத்துக்காக விருதளித்த ஜூரிக்கு நன்றி என தெரிவிச்சிருக்காரு.https://www.youtube.com/embed/Pbm7fx61u4Y