லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து, நடிகர்கள் சிவகுமார் மற்றும் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி லண்டனில் 'வேலியண்ட்' ((Valiant)) சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜாவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.