தமிழ்நாட்டில் S.I.R. பணிகளை புறக்கணித்து, 40,000க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் போராட்டம்.போதிய பயிற்சி கூட கொடுக்காமல், குறுகிய காலத்தில் பணிகளை முடிக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்துவதாக குற்றச்சாட்டு.தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர். பணிகளை இன்று மேற்கொள்ளவில்லைவருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, கால வரையறையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்டிசம்பர் 4ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்கக்கூடிய சூழல் இல்லை, அதிக பணி நெருக்கடி, போதிய கால அவகாசம் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு. எஸ்.ஐ.ஆர். பணிகளில் கூடுதல் பணியாட்கள் பயன்படுத்த வேண்டும்.படிவங்கள் பூர்த்தி செய்வதில் பிரச்னை உள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு போதிய பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் புகார்.