தமிழ்நாட்டில், அவசர கதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை, பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், ஏற்கெனவே பீகார் மாநிலத்தில், அதிக அளவில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் சந்தேகத்தை அனைவரது மனதிலும் எழுப்பி இருப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார். இதனால், வரும் 2ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடி வெல்லும் என்றும், அறுதியிட்டு கூறியுள்ளார்."தமிழ்நாட்டிலும் #SIR: வாக்குரிமை பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்" என்றும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவ மழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் #SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.