தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், இன்று முதல் தொடங்குவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கான பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, இன்று முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நவம்பர் 4ஆம் தேதி கணக்கெடுப்பு துவங்கும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியல் பணிகள் முடிந்து வெளியாகும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.