S.I.R. பணிகளில் தகுதியான ஒரு வாக்காளர் பெயர் கூட விடுபட்டு விடக் கூடாது என்று, திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். S.I.R. பணிகளில் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தகுதியில்லாதவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்று விடக்கூடாது என்றும் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார். திமுகவுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என யார் வந்தாலும் களம் நம்முடையது தான் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இதையும் பாருங்கள் - CM MK Stalin Breaking News | தமிழகத்தை சூழ்ந்துள்ள பேராபத்து - முதல்வர் | S.I.R Meeting | DMK News