வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றும் ஐ.பி.எல். தொடக்க விழாவில் பாடகர் ஸ்ரேயா கோஷல் மற்றும் நடிகை திஷா பதானி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலை நிகழ்ச்சிகளுடன் போட்டி தொடங்க உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.