ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தின் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் ஸ்வீட் ஹார்ட் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் நடிகர் ரியோ ராஜ், நடிகை கோபிகா ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.