பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி ஒரு நாள் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற இடத்தை இந்தியாவின் ஷுப்மன் கில் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் 259 ரன்களை அடித்த ஷுப்மன் கில் ஒரு சதத்தையும் இரண்டு அரை சதங்களையும் அடித்தார். இதை அடுத்து ஐசிசி தரவரிசையில் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்தை ஷுப்மன் கில் பிடிப்பது இது இரண்டாம் தடவையாகும். ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சோபிக்கவில்லை என்பதால் தரவரிசைப் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.