மகர சங்கராந்தியையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள் மீது பூ மழை பொழியப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேள நிகழ்ச்சிக்கு உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், மகரசங்கராந்தியை யொட்டி ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டது.