மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த நிர்வாக சீர்கேட்டையும் மற்றும் முறைகேடுகளையும் வீடியோவாக எடுத்து வெளியிட்ட ஆவின் ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ள சர்வாதிகாரப் போக்கிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக அக்கறையுடன் ஆவின் ஊழியர் வெளிக்கொணர்ந்துள்ள புகாரில் உண்மை உள்ளதா? என்று ஆராய்ந்து தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தவறை சுட்டிக்காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கை காட்டுவதாகக் கூறியுள்ளார்.ஆவின் நிறுவனத்தின் தவறைச் சுட்டிக்காட்டிய ஊழியரை மீண்டும் பணி அமர்த்தவேண்டும் என்றும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.