மொசாம்பிக்கில் (( Mozambique )) வெடித்த போராட்டம் காரணமான ஏராளமான கடைகள், வீடுகள், வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 21 உயிரிழந்துள்ள நிலையில், 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.