லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு காஞ்சனா படம் வெளியானதையடுத்து, 2015ல் காஞ்சனா 2 மற்றும் 2019-ல் காஞ்சனா 3 என அடுத்தடுத்து வெளியாகின. இதன் தொடர்ச்சியாக காஞ்சனா - 4-ல் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகை நோரா பதேகி நடிக்கவுள்ள நிலையில் பான் இந்தியா படமாக உருவாகும் எனவும், ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.