இஸ்ரேலின் பீர்ஷெபாவில் பேருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஹுராவுக்கு அருகிலுள்ள உம்பி என்ற பெடோயின் கிராமத்தைச் சேர்ந்த இஸ்ரேலிய குடிமகன் அஹ்மத் அல்-உக்பி என்பதும், ஐடிஎஃப் வீரர்களால் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.