ஒரு சவரன் தங்கத்தின் விலை 84 ஆயிரம் ரூபாயை தொட்டு இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில், ரூ.60,000க்கும் கீழ் விற்பனையான தங்கம் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து ரூ.80,000ஐ தொட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக விலை உயர்ந்து வரும் தங்கம் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.10,430க்கு விற்பனையானது. சரவனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,440 ஆக உயர்ந்திருந்தது. இன்று தங்கத்தின் விலை சற்று குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை உயர்ந்து அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று காலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10.500 க்கு விற்பனையாகிறது. இதேபோல் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதேபோல் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தால், விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை லட்சத்தை கடக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.இதையும் பாருங்கள்; மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை.. | Gold Rate Today | Gold Market TN