கேரளா மாநிலம் கோட்டயம் அருகே சாலையில் சென்ற கார் எதிரே வந்த ஆட்டோ மீது தாறுமாறாக மோதிய விபத்தில், ஆட்டோவிலிருந்து இருவர் தூக்கி வீசப்படும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த விபத்தில், ஆட்டோவில் இருந்த இருவர் மற்றும் காரில் பயணித்த மூவர் என 5 பேர் பலத்த காயமடைந்தனர்.