மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை நொறுங்கி விழுந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், சிவாஜியிடம் மட்டுமல்ல ஒவ்வொரு மராட்டியரிடமும் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினார்.சிந்துதுர்க் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை கனமழையால் இடிந்து விழுந்ததை குறிப்பிட்டு பேசிய ராகுல்காந்தி, சிலை நிறுவப்பட்ட சில நாட்களிலேயே இடிந்து விழுந்தது, சிவாஜியை அவமதிக்கும் செயலாகும் என்று கூறினார்.