ஷேக் ஹசினாவின் கருத்துகள் அவருடைய தனிப்பட்ட கருத்துகள் என்றும், அதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முகமது யூனுஸ் தம்மை கொல்ல முயன்றதாக பரபரப்பு குற்றம் சாட்டிய ஷேக் ஹசினாவின் கருத்துகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்த வங்கதேசம், அவரது கருத்துகளை கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியாவை சாடி கண்டனம் தெரிவித்திருந்தது.